tamilnadu

img

தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழக தலைவராக நடிகை ரோஜா நியமனம்

ஹைதராபாத்:
ஆந்திர அரசின் தொழிற்சாலை கள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மே 30-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அன்றைய தினம் வேறு அமைச்சர்கள் பதவியேற்காத நிலையில், புதனன்று 25 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவருக்கு அமைச்சர வையில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேசன் தலைவராக நடிகை ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

;